Editorial / 2021 ஜனவரி 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவை, மீண்டும் களமிறக்குவதற்கு இணக்கம் காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஹேஷான் விதான, கருத்து மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு தொடர்பில் ஆராய்வதற்காக, அண்மையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் கருத்து மோதல்கள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது. எனினும், அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை.
சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதில், சம்பிக்க எம்.பி வெளிநடப்புச் செய்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும்,சம்பிக்க எம்.பியிடத்தில் எவரும் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை என்றும், மாறாக யாப்பிலுள்ள உள்ளீடுகள் தொடர்பாக ஐ.ம.ச எம்பிக்கள் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர் என்றும் ஹேஷான் எம்.பி தெரிவித்தார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago