2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சட்டவிரோதமாகவே விளக்கமறியலில் வைத்தனர் ஞானசார தேரர் மனுத்தாக்கல்

Gavitha   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். எஸ். செல்வநாயகம்

ஹோமாகம நீதிமன்ற நீதவான், தன்னைச் சட்டவிரோதமாக விளக்கமறியலுக்கு அனுப்பியதன் மூலம், தனது அடிப்படை உரிமையை  மீறியுள்ளார் என அறிவிக்குமாறு கோரி, பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் வண. கலபொட அத்தே ஞானசார தேரர், அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, பௌத்தத்துக்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என கூறும் அரசியலமைப்பின் வாசகத்தை பிரதிவாதிகளான பொலிஸ் அதிகாரிகள் மீறியுள்ளனர் எனவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (25) தாக்கல் செய்யப்பட்டுள்ள இம்மனுவில், ஹோமாகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விஜயரத்ன, தலைமைக் காரியாலயப் பரிசோதகர் உபுல் லியனகே, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .