2025 மே 09, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமான பொருட்களுடன் மூவர் கைது

Simrith   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட  தகவல் தொடர்பு சாதனங்களுடன் மூவர் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 27 மற்றும் 46 வயதுடைய கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் வாகனம்  சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து சட்டவிரோதமான பொருட்களுடன் குறித்த மூவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 09 மடிக்கணினிகள், 121 கையடக்க தொலைபேசிகள், 100 சிறிய கையடக்க தொலைபேசிகள், 240 சார்ஜர்கள், தொலைபேசி பேட்டரிகள் மற்றும் போன் கவர்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X