2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

சடலம் மீட்பு

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.புஹாரி

சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைபறிச்சான் பிரதேசத்திலுள்ள பால் சேகரிப்பு நிலையத்தில் இரவு நேர காவலாளியாக கடமை புரிந்து வந்த வயோதிபர் ஒருவர் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேனையூர் 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வே.ம.துறைராஜா (வயது 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பால் சேகரிப்பு நிலையத்தில் கடமை புரியும் ஊழியர்கள் இன்று புதன்கிழமை காலை தமது கடமைக்குச் சென்று பார்த்தபோதே கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாவலர் இறந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் சம்பூர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X