2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சட்டத்தரணியின் காரில் துப்பாக்கி

Janu   / 2025 செப்டெம்பர் 18 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலஸ்முல்ல , நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, சட்டத்தரணி ஒருவரின் காரில் இருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வலஸ்முல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனப் பொருட்கள் மித்தெனிய தலாவ பகுதியில் உள்ள நிலமொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியின் காரில் இருந்து குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், உரிமைப்பத்திரம் பெற்ற துப்பாக்கி என சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் அளித்த பின்னர், துப்பாக்கியை விடுவிக்க வலஸ்முல்ல நீதிமன்ற நீதவான் மல்பா கொடிதுவக்கு உத்தரவிட்டுள்ளார்.

முந்திய செய்திகள்…

'தெம்பிலி லஹிரு', 'பெக்கோ சமன்'  இருவருக்கும் தடுத்துவைப்பு

'கஜ்ஜா' எனப்படும் அனுர விதானகமகே கொலை தொடர்பாக மேலும் விசாரணை நடத்துவதற்காக 'பெக்கோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' ஆகியோரை டிசெம்பர் 2ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம், புதன்கிழமை (17) அன்று பொலிஸாருக்கு அனுமதி அளித்துள்ளது.

வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலை மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட ஏராளமான கொலைகளில் ஈடுபட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களான ‘கெஹல்பத்தர பத்மே’ உட்பட ஐந்து பேர்  இந்தோனேசியாவில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை பொலிஸ் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் சிறப்புக் குழு இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மனம்பேரிக்கு தடுப்புக்காவல்

மித்தெனிய பகுதியில் "ஐஸ்" என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஊடாக புதன்கிழமை (17) சரணடைந்தார்.

அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தடுப்புகாவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொதுஜன பெரமுனவின் அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேச சபை வேட்பாளர்  ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யத் தேடப்பட்டு வரும் சம்பத் மனம்பேரி, நீதிமன்றில் சரணடைய சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக தயாராக இருப்பதாக,  அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை (15)  அறிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும், மித்தெனியவில் கைப்பற்றப்பட்ட ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்றையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X