2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு அவுஸ்திரேலியா மீண்டும் எச்சரிக்கை

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருகைத் தரமுடியுமென, சில சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்களால் முன்னெடுக்கப்படும் அறிவிப்புகளால் ஏமாற வேண்டாமென, இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 வருட காலமாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது எல்லைப் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன், எந்தவொரு நபரும் படகுகள் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் உள்நுழைவதற்கு இடமளிக்கப்படாதென அறிவித்துள்ளது.

இந்நிலையில் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை அவுஸ்திரேலியா அரசாங்கம் தமது சர்வதேச பங்காளி நாடுகளுடன் இணைந்து, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 78 சந்தர்ப்பங்களில் 2525 பேரின் முயற்சிகளை தோற்கடித்துள்ளதுடன் இதன்போது, 614 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் அலுவலகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அவுஸ்திரேலியாவில் 2013ஆம் ஆண்டு தொடக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட குடிவரவு சட்டத்தின் கீழ் அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 827 பேர் 34 சந்தர்ப்பங்களில் நாடு கடத்தப்பட்டுள்ளதுடன், இதில் 166 இலங்கையர்களும் உள்ளடங்குவதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .