S.Renuka / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் நாளை 04ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (02) பின்வரும் வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கம் நோக்கிய சுதந்திர மாவத்தை (Torrington Avenue).
ஸ்டேன்லி விஜேசுந்தர மாவத்தையிலிருந்து அத்திவார நிறுவனம் (Foundation Institute) நோக்கிய பகுதி.
பௌத்தாலோக மாவத்தை டொரிங்டன் சந்தியிலிருந்து பிரேமகீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்கு நுழையும் பகுதி.
பௌத்தாலோக மாவத்தை ஆர்.எப்.பி (R.F.P) சந்தியிலிருந்து மெய்ட்லண்ட் பிளேஸ் (Maitland Place) பகுதி.
விஜேராம மாவத்தை வித்தியா மாவத்தை சந்தியிலிருந்து வித்தியா மாவத்தைக்கு நுழையும் பகுதி.
மெய்ட்லண்ட் கிரசண்ட் ஆர்.பி. சேனாநாயக்க மாவத்தை சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி.
சுதந்திர சுற்றுவட்டத்திலிருந்து மெய்ட்லண்ட் கிரசண்ட் நோக்கிய பகுதி.
ஹோர்டன் பிளேஸ் மெய்ட்லண்ட் கிரசண்ட் சந்தியிலிருந்து சுதந்திர சுற்றுவட்டம் நோக்கிய பகுதி.
இந்தக் காலப்பகுதியில் குறித்த வீதிகளைப் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago
21 minute ago
21 minute ago