2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சதொச பிரதி பொது முகாமையாளர் கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் நிர்வாகத் தரத்தில் தொழிலைப் பெற்றுக்கொள்வதற்காக, போலியாக தயாரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கியதாகத் தெரிவித்து, சதொச நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் (விற்பனை) ஊழல் விசார​ணைப் பிரிவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பட்டதாரியெனத் தெரிவித்து ​போலியாகத் தயாரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கியே சதொச நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் இவர் தொழில் பெற்றக் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டே, இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் ​வழங்குவதற்காக ஊழல் விசாரணைப் பிரிவுக்கு சதொச நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் வருகைத் தந்தப் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .