Editorial / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாகன கொள்ளையர்களின் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மாலம்பே தொடக்கம் அம்பத்தளை வரையிலான சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்பாடு செய்யுமாறு மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் அப்பகுதி பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு திங்கட்கிழமை (23) பணிப்புரை விடுத்துள்ளார்.
இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதாக அப்பகுதி மக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து ஆளுநர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க மாவத்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும், வீதியின் நுழைவாயிலின் இருபுறமும் பாதுகாப்பை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆளுநருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளது சிசிடிவி கேமரா அமைப்பு, மின்கம்பங்களை நிறுவுதல் மற்றும் தொடர்புடைய இடங்களில் பொலிஸ் சோதனைச் சாவடிகளை நிறுவுதல் ஆகியவற்றுக்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள இந்த பிரதேசத்தை முல்லேரிய மற்றும் மாலம்பே உள்ளூராட்சி சபைகளுக்கு மாற்றுவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
11 minute ago
32 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
32 minute ago
38 minute ago
43 minute ago