2025 ஜூலை 05, சனிக்கிழமை

சந்தையில் விலங்குப் பால்மா

Editorial   / 2019 ஜனவரி 05 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விலங்களுக்காக ஒதுக்கப்படும் பால்மாக்களை, புதிதாகப் பொதியிட்டு சந்தைப்படுத்தும் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேவல்தெனிய - தெனிஹெல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, இது தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 14,000 கிலோகிராம் பால்மா தொகையும் 400 கிராம் பால்மா பக்கற்றுகள் 2,250 உம், கொழும்பு விசேட குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நியூஸிலாந்தில் தயாரிக்கப்பட்ட பால்மா பக்கற்றுகள் என, கடந்த சில நாட்களாக சந்தைகளில் இவை விநியோகிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில், இதுவரை மூவர் கைது செய்யப்பட்டு, ​பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இம்மூவரும், நாளை மறுநாள் (07), துல்கிரிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .