2024 மே 22, புதன்கிழமை

சினோபெக்கும் எரிபொருள் விலைகளைக் குறைத்தது

Simrith   / 2024 மே 01 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்துடன் இணைந்து, சினோபெக் எனர்ஜி லங்கா இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது விலை திருத்தத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய சில்லறை விலை ரூ. 365 ஆகும். 95 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய சில்லறை விலை ரூ. 420 ஆகவுள்ளது.

ஒரு லிட்டர் ஒட்டோ டீசல் ரூ. 27 இனால் குறைக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய விலை ரூ. 333 ஆகும். இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 9 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய சில்லறை விலை ரூ. 377 ஆகவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .