2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

‘சுனாமி’: சிறை உடைப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது

Editorial   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

2004 டிசம்பர் 26, அன்று நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்திய சுனாமி பேரழிவின் போது சிறையை உடைத்துக்கொண்டு தப்பிக்க முயன்ற 56 கைதிகள் மீதான வழக்கு காலி மேல் நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம முன் விசாரணைக்கு வந்தது.

சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, சிறைச்சாலைத் துறை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், சிறைச்சாலை அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் காவலில் இருந்து தப்பிக்க முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.

சம்பவத்தில் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்கள் இறந்துவிட்டதாகவும், மேலும் ஆறு பேர் காணாமல் போயுள்ளதாகவும்  நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.  . 25 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், 41 சந்தேக நபர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

அரசு வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X