2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

சபுகஸ்கந்த மூடப்படும் நாட்கள் அறிவிப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 20 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் மீண்டும் மூடவேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மசகு எண்ணெயை ரொக்கமாகப் பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் கடனுக்கு மசகு எண்ணெயைப் பெற முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் எரிபொருளைப் பெறுவதற்கு 90 நாட்களுக்கு முன்னதாக கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும், மாற்று வழிகளில் பெற முயற்சிப்பதாகவும் இல்லை என்றால் ஜனவரி 3 முதல் 23 வரை 20 நாட்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டும் என்றார்.

இருப்பினும், ஜனவரி 23ம் திகதி முதல் தொடர்ந்து மசகு எண்ணெய் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .