2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சம்பத் மனம்பேரி அதிரடி அறிவிப்பு

Editorial   / 2025 செப்டெம்பர் 15 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேடப்படும் நிலையில் தலைமறைவாகியிருக்கும் சம்பத் மனம்பேரி, அதிரடி அறிவிப்​பொன்றை விடுத்துள்ளார்.

மித்தெனிய பகுதியில் "ஐஸ்" என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் தேடப்படும் சம்பத் மனம்பேரி, தனது வழக்கறிஞர் மூலம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு, தான் நீதவான் நீதிமன்றத்தில் சரணடைய உள்ளதாகத் தெரிவித்தார்.

  சம்பத் மனம்பேரி சரணடைந்ததைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், ஐஜிபிக்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பாக விசாரணை அதிகாரிகளுக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தற்போது கைது செய்யத் தேடப்படும் சம்பத் மனம்பேரி தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .