2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

”சம்பளத்தை அதிகரிக்க மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை”

Simrith   / 2024 மார்ச் 19 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு மத்திய வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கை தவறானது எனவும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் பொது நிதி தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதாகவும் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி மத்திய வங்கி தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புதிய மத்திய வங்கிச் சட்டத்தின் அடிப்படையில் தீர்மானங்களை எடுக்க தமக்கு சுதந்திரம் இருப்பதாக தெரிவிக்கும் மத்திய வங்கியின் கூற்று தவறானது எனவும்  எந்தவொரு சட்டமும் அரசியலமைப்பின் கீழ் வர வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

"அரசியல் தலையீடுகள் இன்றி செயல்படுவதை உறுதி செய்வதற்காகவே புதிய மத்திய வங்கி சட்டத்தின் கீழ் மத்திய வங்கிக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மத்திய வங்கி செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். துரதிஷ்டவசமாக மத்திய வங்கி முதலில் தனது ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்வே செய்துள்ளது என  தனது நிலைப்பாட்டை விளக்கினார்.

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் பல நாட்களாக கேள்விகள்  எழுப்பப்பட்ட போதிலும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழு (COPF) தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) அறிக்கைக்காக அரசாங்கம் காத்திருக்கக் கூடாது என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சம்பள உயர்வை திரும்பப் பெறுவது குறித்து அரசாங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

"மத்திய வங்கி COPF இன் கீழ் இல்லை, அது அரசாங்கத்தின் கீழ் உள்ளது," என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X