2025 ஜூலை 09, புதன்கிழமை

செம்மணியில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

R.Tharaniya   / 2025 ஜூலை 09 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் பதின்மூன்றாவது நாள் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் செவ்வாய்கிழமை (08)அன்று முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வாய்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே சந்தேகத்துக்கு இடமான பகுதியாக தொல்லியல் பேராசிரியரால் அடையாளம் காணப்பட்ட பகுதி அகழ்வு ஆராய்ச்சி பணிக்குரிய இரண்டாவது பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே அகழ்வாய்வு ஆரம்பிக்கப்பட்ட பகுதி முதலாவது இடமாகவும் சந்தேகத்துக்கிடமான பகுதியாக அகழப்படும் பகுதியில் மூன்று மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது அகழ்வாராய்ச்சிக்கான இரண்டாவது பகுதியாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

அடையாளப்படுத்தப்பட்ட மூன்று மனித எலும்புக்கூடுகளும் துப்புரவாக்கப்பட்டு புதன்கிழமை (09) அன்று இலக்கமிடும் நடவடிக்கை எடுக்கப்படும்- என்றார்.

நிதர்சன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .