2025 ஜூலை 16, புதன்கிழமை

செம்மணியில் மீண்டும் அகழ்வு

Freelancer   / 2025 ஜூலை 16 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா  நீதிமன்றுக்கு அறிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பான அடுத்த தவனை எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதிக்குத் திகதியிடப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X