Editorial / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா
சம்மாந்துறை நகரின் பிரதான வீதியில் பாதையோரங்களில் வியாபாரம் செய்வது வியாழக்கிழமை(01) முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் செவ்வாய்க்கிழமை (30) அன்று தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச சபையின் வீதியோர மீன் வியாபாரிகள் மற்றும் வியாபாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சம்மாந்துறை நகரிலுள்ள அம்பாறை வீதி, பொலிஸ் வீதி, கல்முனை வீதி
ஆகியவற்றின் இரு புறங்களில் உள்ள வீதியோர மீன் வியாபாரிகள் உட்பட மரக்கறி வியாபாரிகள்,பழ வியாபாரிகள் சகல வீதியோர வியாபாரிகளும் தமது வியாபார நடவடிக்கைகளை 01ஆம் திகதி முதல் ஹிஜ்ரா பொது சந்தையின் உட்பகுதியில் மேற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைபாதை வியாபாரத்திற்கு வரும் வியாபாரிகள் வீதி ஓரங்களில் கழிவுப்
பொருட்களை வீசிவிட்டு செல்வதால் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
வீதி ஓரங்களில் வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாமல் பல அசௌகரீங்களை எதிர்கொள்வதோடு,
வீதி விபத்துக்களும் அதிகரித்துக் காணப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது.
வடிகானுக்கு இடப்பட்டுள்ள பாதுகாப்பு மூடிக்கு மேல் உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இப் பொருட்களில் ஈ பரவுவதோடு, அசுத்தமடைந்து காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத் தீர்மானங்களை மீறி வீதியோரங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்ககை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
3 minute ago
11 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
21 minute ago
1 hours ago