2025 ஜூலை 05, சனிக்கிழமை

சம்பள விவகாரம்; கூட்டணியின் கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றது

Editorial   / 2019 பெப்ரவரி 13 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணி முன்வைத்த இரு கோரிக்கைகைளையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என, கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.   

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சில், நேற்று (12) நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில், கூட்டணியின் அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், அ.அரவிந்தகுமார் ஆகியோரும் அரசாங்கத்தின் தரப்பில், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தொழில் அமைச்சர் ரவீந்தர சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டனர்.  

இதன்போது, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதான கோரிக்கையான, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்பதை, அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

மேலும் உடனடியான, தற்காலிகத் தீர்வாக, அரசாங்கத் தரப்பில் நாள்சம்பளத்துக்கு ஒரு தொகை பங்களிப்பைச் செய்வதற்கும் ஒரு வருட காலத்துக்குள் பெருந்தோட்டத்துறையின் முகாமைத்துவ முறையை மறுசீரமைப்பதற்கும் இணக்கப்பாடு கட்டப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்படுகிறது.  

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில், மேற்படித் தொகைத் தொடர்பாக அதிகரிப்பு அறிவிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .