Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 24 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்ட விதம் தொடர்பில் பொலிஸாரால், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு இதுவரை அறிக்கையிடப்படவில்லை என, ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான அறிக்கையை விரைவில் பெற்றுக்கொடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஊடாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு அண்மையில் அறியத்தந்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் கூடவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைதுசெய்யப்பட்ட விதம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் வெளியிடும் கருத்துகள் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கடந்த 20ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகவும் அதன் பிரகாரமே பதில் பொலிஸ் மாஅதிபரிடம் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதற்கு முன்னர் சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டுமென்பது சம்பிரதாயமாக உள்ளதாகவும் சம்பிக்க ரணவக்கவின் கைது நடவடிக்கையில் இந்த நடைமுறை பின்பற்றப்படவில்லையெனவும் குற்றச்சாட்டு தொடர்ந்து சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Jul 2025