2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சர்வகட்சி மாநாடு, காலவரையறைக்கு அமைவாக இடம்பெறும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்குத் தீர்வு காணப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த சர்வகட்சி மாநாடு, உரிய நிகழ்ச்சி நிரல் மற்றும் காலவரையறைக்கு அமைவாக இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாடு, இரண்டாவது முறையாக ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில்,  ஜனாதிபதி செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'ஜெனீவா யோசனைகள் தொடர்பில் எடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும், இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த சர்வகட்சி மாநாடு, உரிய நிகழ்ச்சி நிரல் மற்றும் காலவரையறைக்கு அமைவாக இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சர்வகட்சி மாநாட்டின் முதலாவது கூட்டத்தில் அரசியல் கட்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைகள் யாவும், மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு, சகல கட்சிகளுக்கும்  கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு, அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்தார்.

உண்மையைக் கண்டறியும் பொறிமுறை,  நீதி வழங்கல் பொறிமுறை, மறுசீரமைத்தலுக்கான பொறிமுறை, இழப்பீடு வழங்குவதற்கான பொறிமுறை மற்றும் மீள பொறுப்பு தொடர்பான பொறிமுறையின் அடிப்படையில் கருத்துகளைக் கேட்டறிவதற்காக, நிபுணர் குழு பலவற்றை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாட்டின் முதலாவது கூட்டத்தில், கட்சிகளின் சார்பில் 12 யோசனைகள் முன்வைக்கப்பட்டன. சர்வகட்சி அரசியல் பிரதிநிதிகளின் சந்திப்பை, நடைமுறைச் சாத்தியமாக்குவதற்கு மிக மிகப்பொறுப்புடன் ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X