2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சர்வதேச ரீதியில் கோப்பிக்கு கேள்வி அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியில் கோப்பிக்கான கேள்வி அதிகரிப்பதாகவும் இதனால் இலங்கைக்கு வருகின்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கோப்பியை அதிகளவில் கொள்வனவு செய்வதாகவும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

'கடந்த ஐந்து வருடங்களில் மாத்திரம் 331.4 மெற்றிக்டொன் கோப்பி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில், 6,137 ஹெக்டயர் நிலப்பரப்பில் கோப்பி பயிரிடப்படுகின்றது. கடந்த ஐந்து வருடங்களில், 17,117 மெற்றிக்டொன் கோப்பி உற்பத்தி செய்யப்பட்டுள்ளதுடன், 179.92 மெற்றிக்டொன் கோப்பி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது.

'வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமையானது, கோப்பி உற்பத்தியாளர்களுக்குச் சாதகமான முறையில் அமைந்துள்ளது. உற்பத்தியார்கள் நல்ல விலையில் கோப்பியை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது' என்றார்.

இதேவேளை, அரசாங்கம் என்ற ரீதியில் குறித்த பயிர்ச்செய்கையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .