2025 மே 10, சனிக்கிழமை

சர்ச்சைக்குரிய ஆசிரியர் எமக்கு வேண்டாம்: புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2025 மே 09 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணத்துக்குக் காரணமாகக் கருதப்படும் ஆசிரியர், புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த ஆசிரியர் தங்களுடைய பாடசாலைக்கு வேண்டாமென்று அப்பாடசாலையின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மையில் கொட்டாஞ்சேனை பகுதியில் கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கல்வி பயின்ற இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்பாக பெரும் போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆசிரியரையும் கைது செய்யுமாறு போராட்ட காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

என்றாலும், குறித்த ஆசிரியர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுடன், ஆசிரியருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் புத்தளம் ஸாஹிரா கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தமது பாடசாலைக்கு வேண்டாம் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X