Thipaan / 2017 ஜூலை 20 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன, தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் செலுத்தத் தவறின் இரண்டு மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டும் என்றும், கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார, இன்று (20) உத்தரவிட்டார்.
தேசிய லொத்தர் சபையின் தலைவராக அவர் இருந்த போது, 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுக்கான சொத்துகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களைக் கையளிக்கவில்லை, என, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்களை சரண குணவர்தன ஒப்புக்கொண்டதையடுத்து, அக்குற்றத்துக்கான தண்டனை, ஜூலை 20ஆம் திகதி வழங்கப்படும் என, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago