2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சரத் ஏக்கநாயக்கவிடமும் FCID விசாரணை

Gavitha   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிடம், பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர், நேற்று சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக விசாரணை மேற்கொண்டனர்.

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே முதலமைச்சர் ஏக்கநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்காக, நேற்று காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற முதலமைச்சர், அங்குகிருந்த அதிகாரிகளிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்களாக வாக்குமூலமளித்துவிட்டு, நண்பகல் 12 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.

இந்த திணைக்களத்தில் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறியவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வேறு சில சம்பவங்களின் போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனுடன் தொடர்புடைய அறிக்கைகள் சில கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X