2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சரத்சந்திரவுக்குப் பிணை

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கிரிக்கெட் பாதுகாப்புப் பணிப்பாளரும் பொஸிஸ் விசேட அதிரடிப் படையின் முன்னாள் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.எல்.எம்.சரத்சந்திர, 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணைகள் இரண்டுடன், கொழும்பு பிரதான நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனத்தைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அண்மையில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .