Janu / 2026 ஜனவரி 19 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து 26ஆவது முறையாக நடத்தும் ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா கல்கிஸை, மவுன்ட்லிவினியா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை ( 20) ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றியமைக்காக ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளன.
உபாலி தென்னகோன் (Upali Tennakoon)

உபாலி தென்னகோன் 1970களில் பாடசாலை மாணவராக இருந்தபோதே பத்திரிகைகளுக்கு கட்டுரைகள். சிறப்பு அம்சங்கள் மற்றும் செய்திகளை எழுதத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அவர் 'தினமின' பத்திரிகையில் சுதந்திர ஊடகவியலாளராகவும் பின் பத்திரிகைத்துறையில் செய்திப்பிரிவு ஊடகவியலாளராகவும் சேர்ந்தார். பின்னர் சிலுமின மற்றும் தருணி உட்பட பல லேக் ஹவுஸ் வெளியீடுகளில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றார். செப்டம்பர் 1981 இல், உபாலி நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டின் திவயின பத்திரிகையில் அதன் நிறுவுனர் குழு உறுப்பினராக சேர்ந்தார். பின்னர் அவர் மாகாண செய்தி ஆசிரியர் செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் இணை ஆசிரியர் போன்ற பல்வேறு பதவிகளில் பணியாற்றியதுடன் 1994 இல் 'திவயின'வின் பதிப்பாசிரியராக நியமிக்கப்பட்டார்
புஷ்பா இலங்கந்திலேக்க (Pushpa Ilangantilleke)

புஷ்பா இலங்கந்திலேக்க 45 ஆண்டுகளுக்கும் மேலான ஊடகத்துறை அனுபவத்தை கொண்டவராவார். 1981ஆம் ஆண்டு, லேக் ஹவுஸ் நிறுவனத்தில் சுயாதீன எழுத்தாளராக தனது ஊடக வாழ்க்கையைத் தொடங்கினார். 1982ஆம் ஆண்டு, திவயின பத்திரிகையில் இணைந்து கொண்ட அவர் 2010ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகள் உபாலி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியர், துணைப் பிரதம ஆசிரியர், ஆசிரியர் எனப் பல பதவிகளை வகித்தார். 2011 முதல் ஐந்து ஆண்டுகள் 'ரிவிர' தினசரி பத்திரிகையின் சிறப்பு கட்டுரை ஆசிரியராக பணியாற்றினார். 2017 முதல் ஐந்து ஆண்டுகள் 'லங்காதீப (ஞாயிறு)'பத்திரிகையில் துணை ஆசிரியரும் சிறப்பு கட்டுரையாளராகவும் அதன் பின்னர் 2024 முதல் ஒன்றரை ஆண்டுகள் மொனரா (ஞாயிறு)' பத்திரிகையில் சிறப்பு கட்டுரையாளராகவும் பங்களித்தார்.
இரா அ.இராமன் (R. A. E. Raman)

கண்டி பூரணவத்தையில் 1942ஆம் ஆண்டு பிறந்த இரா.அ இராமன், இலங்கைத் தமிழ் இலக்கியம் ஊடகம் மற்றும் பண்பாட்டுத் துறையில் முக்கிய பங்களிப்பு செய்துள்ள எழுத்தாளர், ஊடகவியலாளர் மற்றும் செயற்பாட்டாளராவார். குறிஞ்சித்தேனி மற்றும் பூரணவத்தை காகுத்தன் என்ற புனைப்பெயர்களில்
குறிப்பாக மலையகப் பகுதிகளில் தமிழ் மொழி மற்றும் அறியப்படும் அவர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்.
தினக்குரல் பத்திரிகையின் கண்டிக்கிளை முகாமையாளராக 18 ஆண்டுகள் கடமையாற்றி 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஊடக மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக செயற்படும் அவர், முன்னதாக கண்டித் தமிழ் சங்கத்தின் செயலாளர் மற்றும் கைலாசபதி ஆய்வு மையத்தின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். இலக்கிய உலகில் இவர்கள் மற்றும் இது கதையல்ல நிஜம் ஆகிய நூல்களை அவர் எழுதி வெளியிட்டுள்ளார். அம்மா, பூரணம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும், கண்டி இலக்கியச் செய்திமடல், இனி போன்ற இலக்கிய செய்தி பத்திரிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அவரது இலக்கியச் சேவைகளுக்காக மாகாண மற்றும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கொழும்பு நெலும் பொக்குன மண்ட பத்தில் நடைபெற்ற தேசிய விழாவில் கௌரவிக்கப்பட்ட 100 கலைஞர்களில் ஒருவராகவும் அவர் இடம் பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாதிக் தௌஃபிக் (Sa’adi Thawfeeq)

சாதிக தௌஃபீக இலங்கையின் விளை யாட்டு ஊடகவியலாளரும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவம் கொண்ட சிரேஷ்ட கிரிக்கெட் எழுத்தாளருமாவார். 1976ஆம் ஆண்டில் தனது விளை யாட்டு ஊடகவியல் பயணத்தை ஆரம்பித்த அவர், எதிர்வரும் மார்ச் மாதத்தில் விளையாட்டு ஊடகவியலில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
1976-2006 வரை லேக் ஹவுஸ் நிறுவனத்தின் டெய்லி நியூஸ் பத்திரிகையில் விளையாட்டு எழுத்தாளராகவும் பின்னர் விளையாட்டு பத்திரிகையாசிரியராகவும் பணியாற்றிய அவர் 2015-2020 வரை குழு விளையாட்டு ஆசிரியராக சேவை செய்தார். 2006 முதல் 2015 வரை தி சண்டே நேஷன் பத்திரிகையில் துணை ஆசிரியர் (விளையாட்டு) பதவியையும் வகித்தார். தற்போது டெய்லி எஃபடி பத்திரி கையில் விளையாட்டு எழுத்தாளராக பணியாற்றி வருகிறார்.
அலெக்ஸாண்டர் பாலசூரிய (Alexandra Balasooriya)

அலெக்ஸாண்டர் பாலசூரிய இலங்கையின் ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள புகைப்பட ஊடகவியலாளராகத் திகழ்கிறார் அவர் 1977ஆம் ஆண்டு தவச பத்திரிகையில் புகைப்படக் கலைஞராக தனது தொழில்முறை ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார்.
1950ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி திம்பிரிகஸ்யாயவில் பிறந்த அவர் கொழும்பு இசி பத்தனக் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிக் காலத்தி லேயே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட அவர் 1985ஆம் ஆண்டின் இறுதியில் ஊடகவியல் துறையில் இணைந்து விஜய நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புகைப்படக் கலைஞராக பணியாற்றத் தொடங்கினார். தருணயா சிரிசுத்த இரிதா லங்காதீப, சதிமடலங்காதிய (பின்னர் தினபதா லங்காதீப என மாற்றம் பெற்றது) உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு அவர் சேவை புரிந்தார். 2019ஆம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.
15 minute ago
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
1 hours ago