2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சிறையிலுள்ள நரம்பியல் நிபுணரின் மகள் கைது

S.Renuka   / 2025 ஜூலை 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் ஆலோசகர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்னவின் 21 வயது மகள், கெசல்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை மிரட்டியதாகக் கூறி அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முன்னதாக, மூன்றாம் தரப்பினர் மூலம் அதிக விலைக்கு மருந்துகளை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன மற்றும் இருவரை  சிறையில் வைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .