2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சவர அலகால் மாணவனின் கழுத்தை அறுத்த மாணவன்

Editorial   / 2025 மே 15 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கீதபொன்கலன்

மாணவர்கள் இருவருக்கு இடையில், வியாழக்கிழமை (15) ஏற்பட்ட கைகலப்பில் மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிட்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் இரண்டு மாணவர்களுக்கு இடையே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

  பாடசாலையில் க.பொ.த.உயர்தரம் கற்கும் மாணவன் இதே பாடசாலையில் க.பொ.த.சாதாரண தரத்தில் கற்கும் மாணவனை தாக்கி சவர அலகால் கழுத்தை அறுத்துள்ளார்.

படுகாயமடைந்த காயமடைந்த மாணவன் முதலில் புல்மோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மாணவனை தாக்கி காயமேற்படுத்திய மாணவன்   தப்பிச்சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.காதல் விவகாரமே இவ் மோதலுக்கு காரணம் என சக மாணவர்கள் கூறுகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X