2025 ஒக்டோபர் 31, வெள்ளிக்கிழமை

சஷி வீரவன்ஸவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலித் தகவல்களைப் பயன்படுத்தி இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்  கொண்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸவுக்கு எதிராக இரகசியப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு  இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே கஇந்த வழக்கின் விசாரணைகள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஓய்வுப்பெற்ற பிரதி பதிவாளர் நாயகம் சுமதிபால ஹெட்டியாராச்சியின் சாட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

போலித் தகவல்களைப் பயன்படுத்தி வெ ளிநாட்டு கடவுச்சீட்டினைப் பயன்படுத்தியமையானது குடிவரவு – குடியகல்வு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமெனத் தெரிவித்து சஷி வீரவன்ஸவுக்கு எதிராக இரகசியப் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X