Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 03 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீ்ர்கொழும்பு – கொப்பரவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வளர்த்துவரப்பட்ட, சாலி என்ற பெயருடைய நாயொன்றை, இனந்தெரியாதவர்களால் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்ட சம்பவத்தையடுத்து, நாளை (04) நீர்கொழும்பு பிரதேசத்தில், மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக, save a pet with love என்ற மிருகங்களை பாதுகாக்கும் அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில், மிருகங்களை பாதுகாக்கும் அமைப்புக்கள் அனைத்துக்கும் அழைப்பு விடுப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சாலி எனப்படும் லெப்ரடோ வகையை சேர்ந்த குறித்த நாயை இவ்வாறு தீயிட்டு கொளுத்திய நபர் பற்றி ஏதேனும் தகவல்கள் தெரியவருமாயின், உடனடியாக அறிவிக்கும்படியும், குறித்த நபரை கண்டுபிடிக்க உதவி செய்யும் நபருக்கு 1இலட்சம் ரூபாய் பணம் வழங்கப்படுமென்றும், save a pet with love அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை மறுதினம் (05), பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago