2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு

Freelancer   / 2023 ஏப்ரல் 23 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (23) காலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 

வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.  

இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமுக்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார். 

இது தொடர்பாக இராணுவத்தினரால்  சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .