2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’சிங்களப் படையினரின் தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது’

Freelancer   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக மீனவர்கள் மீதான கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (19) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது

"வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மீனவர்களின் படகை சிங்களக் கடற்படைக் கப்பல் மோதிக் கவிழ்த்துள்ளது. அதில், மூன்று மீனவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர்; அவர்களில் ஒருவர் மாயமாகி விட்டார். சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

சிங்களப் படைத் தாக்குதலில் கடலில் மூழ்கி மாயமான மீனவர் ராஜ்கிரணை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதியுதவியும், சேதமடைந்த படகுக்கு இழப்பீடும் வழங்க அரசு முன்வர வேண்டும்.

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல், படகுக் கவிழ்ப்பு என சிங்களக் கடற்படையினரின் தொடரும் அத்துமீறல்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். சிங்களக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .