Editorial / 2020 டிசெம்பர் 29 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
சிறைச்சாலையில் இருந்து வீடு திரும்பி, தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவர், கொவிட்-19 நோய்த் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரைத் தங்கொட்டுவ கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக, முந்தல் சுகாதார வைத்தியப் பிரிவு தெரிவித்துள்ளது.
முந்தல், சின்னப்பாடு பகுதியைச் சேர்ந்த நபரே கடந்த 17ஆம் திகதி விடுதலையாகி, வீடு திரும்பியிருந்த நிலையில், சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மூலம், கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கடந்த 17ஆம் திகதி, அவரைச் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய பொதுச் சுகாதார பரிசோதகர்கள், 30 தினங்கள் தனிமையில் இருக்குமாறு, அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எனினும், மேற்படி நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, பல வீடுகளுக்குச் சென்றுள்ளதுடன், பல இடங்களுக்கும் பயணித்துள்ளார் என, சுகாதாரப் பிரிவினருக்கு அறியக் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மேற்படி தொற்றாளர் சென்று வந்த ஐந்து குடும்பங்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரைக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில், தொற்றாளருக்கு எதிராக வழக்குத் தொடரவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
24 minute ago
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
2 hours ago