Editorial / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான தோட்டத்தில், சிறிய அறைகளுக்கு வயது குறைந்தவர்கள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்ற முறைபாடுகளுக்கு அமைய அவ்விடத்தை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (24) சுற்றிவளைத்தனர் என ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த சுற்றிவளைப்பின் போது, சிறிய அறைகளில் இருந்த 24 ஜோடிகளை இருந்தன. இன்னும் பல ஜோடிகள் இருப்பதாக கண்டறிந்ததை அடுது்து, அந்த ஜோடிகளை அழைத்து, அவர்களுக்கு நிலைமையை விளக்கி, ஆலோசனைகளை வழங்கியதன் பின்னர், சிறுமிகளின் பெற்றோர்களுக்கு அலைபேசியூடாக அழைப்பை ஏற்படுத்தி, நிலைமையை எடுத்துக்கூறி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்களுடைய குழந்தைகளுடன் அந்த பூங்காவுக்கு செல்லும் போது, பாடசாலைகளுக்குச் செல்லும் வயதை ஒத்தவர்கள் அந்த தோட்டத்தில் மறைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையகளில், காம லீலைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், பிரதேசத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், மதத்தலைவர்கள் மற்றும் புலனாய்வு பிரிவினர் ஊடுக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் கட்டளையின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
59 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago