2026 ஏப்ரல் 27, திங்கட்கிழமை

‘சிறிய துண்டே தீயை மூட்டியது’

Editorial   / 2020 டிசெம்பர் 30 , மு.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயர்நீதிமன்றக் கட்டட வளாகத்தில், டிசெம்பர் 15ஆம் திகதியன்று ஏற்பட்ட தீபரவலானது, பற்றவைக்கப்பட்டதன் பின்னர் தூக்கி எறியப்பட்ட சிகரெட் துண்டினால் ஏற்பட்டது என்பதற்கான காரணத்தை, நிராகரிக்க முடியாதென, அரச பகுப்பாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தீ பரவலானது, எரிபொருள் அல்லது மின்கசிவால் ஏற்படவில்லை என, அரச பகுப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, நீதிமன்றக் கட்டட வளாகத்தில் கடமையாற்றும் சிற்றூழியர்களில் பலர், குறித்த கட்டட வளாகத்தில் இரகசியமாகப் புகைப்பிடிப்பது, முதற்கட்ட விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ பரவலுக்கு காரணமாக அமைந்த, பற்றவைக்கப்பட்ட சிகரெட் துண்டை வீசிய சிற்றூழியர் யார் என்பது தொடர்பான விசாரணைகள்,  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீ பரவல் தொடர்பாக, குற்ற விசாரணைப் பிரிவின் 3 விசாரணைக்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .