2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

J.A. George   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை, கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று(24) காலை ஆரம்பமாகியது.

மூன்று கட்டங்களாக சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை  முன்னெடுக்கப்படவுள்ளன.

12 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, நாள்பட்ட நோய்களையுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றப்படும். பின்னர், 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட, ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, தடுப்பூசி ஏற்றப்படும்.

தொடர்ந்து, 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட ஏனைய சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், விசேட வைத்திய நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X