2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சிறைக்கூண்டிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரம்புக்கன்ன  பொலிஸ் நிலைய சிறைக்கூண்டிலிருந்து, போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஐந்து சந்தேகநபர்கள் நேற்று (18) தப்பி​யோடியுள்ளனர்.

சிறைக்கூண்டிலிருந்து மற்றுமொரு சந்தேகநபரை வெளியில் கொண்டுவருவதற்காக சிறைக்கூண்டை திறக்கும் பொழுது, உள்ளே இருந்த ஐந்து சந்தேகநபர்களும், பொலிஸ் அதிகாரியை தள்ளிவிட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் ரம்புக்கன – குடாகம பிர​தேசத்தைச் சேர்ந்தவர்களென்று தெரிவித்த பொலிஸார், அவர்களை கைது செய்வதற்காக ரம்புக்கன பொலிஸ் நிலையம் உட்பட வேறு சில பொலிஸ் நிலையங்களிலிருந்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .