2026 ஏப்ரல் 22, புதன்கிழமை

’ சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை'

R.Maheshwary   / 2021 ஜனவரி 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள ஆலோசனைகளை சில நிறுவனங்கள் பின்பற்றவில்லை என தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான நிறுவனங்கள் குறித்து அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு அமைய, நிறுவனங்களுக்குள் நுழையும் நபர்கள் தொடர்பான பதிவேடுகளை பராமரித்தல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கைகளை கழுவுவதற்கான இடமொன்றை ஒதுக்குதல், உடல் வெப்பத்தை பரிசோதித்து நிறுவனத்துக்குள் அனுமதித்தல் போன்ற விடயங்களைப் பின்பற்றுவது கட்டாயம் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், குறித்த விடயங்கள் சில நிறுவனங்களில் பின்பற்றப்படுவதில்லை என்றார்.
எனவே, நிறுவன பிரதானிகள், தொழிற்சாலை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்கள், வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விடயங்களைப் பின்பற்றுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .