2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சீனப்பெண் இலங்கையில் கொரோனாவுக்கு மரணம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புலபிட்டிய வீதி, ஆடி​அம்பலம் எனும் விலாசத்தை வசிப்பிடமாகக்க கொண்ட சீனப் பெண் (வயது 38) கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்துள்ளார்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே அப்பெண் மரணமடைந்துள்ளார்.

யூ ஜுவோ என்றப் பெண், மேலே குறிப்பிட்ட விலாசத்தில் இலங்கையருடன் வசித்து வந்துள்ளார்.  கடந்த 15ஆம் திகதியன்று தொண்ட வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று (16) மாலை 6.10 மணியளவில் மரணமடைந்துவிட்டார்.

அப்பெண்ணின் கணவன், இன்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டார். அவருக்கு எந்த சொந்தக்காரர்களும் இலங்கையில் இல்லை எனினும், அப்பெண்ணின் தாயார், சீனாவில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X