2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சீனாவில் பரவும் புதிய வைரஸ் கொடூரமானது

Editorial   / 2021 ஜூலை 30 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நகரமான நான்ஜிங்கில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய கொவிட் தொற்று ஐந்து மாகாணங்களுக்கும் பீஜிங்குக்கும் பரவியுள்ளது.

இதனை மிகக்கொடூர அழிவுப்பரவல் என அந்நாட்டு   மாநில ஊடகங்கள்   குறிப்பிட்டுள்ளன.

நகரின் சுறுசுறுப்புமிக்க விமான நிலையத்தில் ஜூலை 20ஆம் திகதியன்று முதலாவது தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அன்றிலிருந்து கிட்டத்தட்ட 200 பேர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

நான்ஜிங் விமான நிலையத்திலிருந்து எல்லா விமானங்களும் ஓகஸ்ட் 11வரை இடைநிறுத்தி வைக்கப்படும் என ஆதாரம் ஒன்றை சுட்டிக்காட்டி குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

  இது கவனயீனத்தின் வெளிப்பாடு என்னும் விமர்சனங்களை அடுத்து அதிகாரிகள் பரிசோதனைகளை ஆரம்பித்துள்ளனர்.

நகருக்கு வருகை தருவோர் உட்பட குடியிருக்கும்   9.3 மில்லியன் மக்களும் சோதனை செய்யப்படுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தொற்றானது தீவிர தொற்று நோயான டெல்டா வைரஸ்      வகையுடன் தொடர்புடையது  என அதிகாரிகள் நம்புகின்றனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது கண்டறியப்பட்டது ஒரு சுறுசுறுப்பான விமான நிலையமாதலால் அங்கிருந்து வேகமாகப்பரவியுள்ளது.

தலைநகரம் பீஜிங் மற்றும் செங்டு உட்பட குறைந்தபட்சம் 13 நகரங்களுக்கு தற்போது இந்த தொற்று பரவியுள்ளதாக சோதனைகள் மூலம் தெரியவருகின்றன.

ஆனாலும் இது ஆரம்ப நிலையில் உள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த முடியுமென்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

நோய் கொற்றுக்குள்ளான 7 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக நான்ஜிங் உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .