2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சீனியை பதுக்கினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Mayu   / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழில்  சீனியை பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என  யாழ் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

அந்நிலையில் சீனியை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த சிலர் முனைவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறானவர்களை நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  என அவர் தெரிவித்தார்.

எம். றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X