Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தவும் சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்கவும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை மூலம், 1.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் துாதுவர் எலைனா பி.டெப்லிட்ஸ், மிகக் கடினமான காலங்களில் கூட இலங்கையும் அமெரிக்காவும் நண்பர்களாகவும் பங்குதாரர்களாகவும் ஆதரவு வழங்கி வருவதாகவும் உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் இந்தத் தொற்றுநோய்க்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இந்த நன்கொடையானது, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நீடித்த உறவைப் பிரதிபலிக்கின்றது என்றும் கூறினார்.
அத்துடன், கடந்த காலத்தைப் போன்றே, இலங்கையின் கொவிட்-19க்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவதை எண்ணி, தான் பெருமிதம் அடைவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நோய்களைக் கண்டறிதல், கண்காணிப்பு, தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான உதவி, தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, இடர் தொடர்பாடல் ஆகியவற்றுக்காகவே இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளதாகவும் அத்துடன், கொவிட்-19 சோதனைக்கு இலங்கையில் ஆய்வக மய்யங்களை தயாரிக்க அமெரிக்க உதவவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
60 ஆண்டுகளுக்கு மேலாக, உடல்நலம், பேரழிவு தொடர்பான நெருக்கடிகளின்போது இலங்கையர்கள் ஆரோக்கியமாகவும் நெகிழ்ச்சியுடனும் இருப்பதை அமெரிக்க உறுதி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago