Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 04 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் அவசியம் என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சனிக்கிழமை (03) கையளிக்கப்பட்டது.
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைப் போக்குவதற்கான உடனடி முறைமை அவசியம் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.
மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் தொடர்பில், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கலந்துரையாட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை மற்றும் ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேலதிக வசதிகளை ஏற்படுத்தி அவற்றை அபிவிருத்தி செய்வது அவசியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முழு சுகாதார துறைக்கும் கொள்கை மாற்றம் அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு சுட்டிக்காட்டினார்.
புற்றுநோயாளிகளுக்கான மருந்துகள் மற்றும் இன்சுலின் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago