2025 ஜூலை 05, சனிக்கிழமை

சுனாமி ரயிலின் பயணம் ஆரம்பம்

Editorial   / 2019 டிசெம்பர் 26 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த, தேசிய பாதுகாப்புதின நிகழ்வு, ஹிக்கடுவ - தெல்வத்த பேரெலிய சுனாமி நினைவுத் தூபி வளாகத்தில், இன்று (26) நடைபெற்றது.    

சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்ட தினத்தன்று காலை 6.55 மணியளவில், கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயில், தெல்வத்த - பேரெலிய பிரதேசத்தில், சுனாமி அலையில் சிக்கியதில், அதில் பயணித்த 1,500 பேர் உயிரிழந்தனர்.   

சுனாமியால் சேதமடைந்த குறித்த ரயிலின் என்ஜின், ரயில்வே திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டதன் பின்னர், குறித்த என்ஜின் பொருத்தப்பட்ட விசேட ரயில், கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தெல்வத்த- சுனாமி நினைவுத் தூபி வரை, தனது முதல் பயணத்தை, நேற்று காலை 6.30க்கு முன்னெடுத்திருந்தது.    

இதனுடன் இணைந்த வகையில், சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .