2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ சுரக்ஸா ரக்ஸன’ காப்புறுதி திட்டம் முடக்கம்

Editorial   / 2018 டிசெம்பர் 09 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ‘ சுரக்ஸா ரக்ஸன’ காப்புறுதித் திட்டமானது முற்றாக முடங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரை மாத்திரமே இது செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த காப்புறுதி திட்டத்தை நீடிப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 30ஆம் திகதியுடன் இதன் கால எல்லை நிறைவடைந்துள்ளதாகவும் இதனை நீடிப்பதற்காக அமைச்சரவை அனுமதிப் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .