Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 நவம்பர் 24 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் சுற்றாடலை பாதுகாக்கும் செயற்றிட்டம் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த செயற்றிட்ட மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதற்கான பொலிஸ் பிரிவுகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.
இதேவேளை, விபத்துக்களை குறைத்துக்கொள்ளும் நோக்குடன் மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோரை தௌிவூட்டும் செயற்றிட்டமும் பொலிஸ் திணைக்களத்தினால் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .