2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் பாதாள குழுக்கள்

J.A. George   / 2024 மார்ச் 27 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.  

பாதாள உலகச் செயற்பாடுகள் போன்ற கொடூரமான சம்பவங்களால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். 

குறிப்பாக தென் கரையோரமான பெந்தர பிரதேசத்தில் அஹுங்கல்ல, கொஸ்கொட, ரத்கம, ஹிக்கடுவ போன்ற பகுதிகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐரோப்பா போன்ற நாடுகளில் மக்கள் நிம்மதியாக வாழ விரும்புகின்றனர். அவர்கள் இங்கு வந்து துப்பாக்கிச் சூடு சத்தத்தை கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.

இனி அந்த மக்கள் இங்கு வர விரும்பமாட்டார்கள். எனவே சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதும் மிகவும் அவசியம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X