2025 ஜூலை 16, புதன்கிழமை

சுற்றுலா வழிகாட்டி தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பூட்டு

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை- கொயம்பொக்க பிரதேசத்தில் சுற்றுலா  ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலை மூட  நடவடிக்கை எடுத்துள்ளதாக, தங்காலை சுகாதார வைத்திய அதிகார் ஜகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்கு வருகைதந்த குறித்த நபர், கடந்த 15,16,17  ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

கொழும்பை வசிப்பிடமாக கொண்ட குறித்த நபர், சுகவீனமடைந்த நிலையில் நேற்று  (31) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X