2025 மே 12, திங்கட்கிழமை

’சூப்’ தன்சலில் கத்திக்குத்து

Simrith   / 2023 ஜூன் 04 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (3) மாலை தன்சல் ஒன்றிற்கு அருகில் 23 வயதுடைய இளைஞரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூப் தன்சலுக்கு அருகாமையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபரின் பணப்பையிலிருந்த பணம் தொலைந்து போனதையடுத்து அவருக்கும் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் சந்தேக  நபருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து குறித்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கெலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X